என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவாய் நீ இல்லாமல்..!
அமாவாசையானது
நிலவாய் நீ இல்லாமல்..!
என் இதயப் படகு
தவிக்கிறது தனிமையில்
துடுப்பாய் நீ இல்லாமல்!
தவிக்கிறது தனிமையில்
துடுப்பாய் நீ இல்லாமல்!
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலராய் நீ இல்லாமல்..!
மணம் வீசவில்லை
மலராய் நீ இல்லாமல்..!
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனமாய் நீ இல்லாமல்!
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனமாய் நீ இல்லாமல்!
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்!
நுகர்வோர் இல்லா வாழ்வாய்!
என் தனிமைப் பயணம்!
நுகர்வோர் இல்லா வாழ்வாய்!