தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத்
தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே
ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த
உலகறியத் தலைமகனாய் வந்தவர்!

இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் – அவர்
இணையில்லாக் குணம்படைத்தத் தாயவர் – நாட்டின்
நிலையறிந்து முன்னேறச் செய்தவர் – மக்கள் நெஞ்சத்தில்
நீங்காமல் நிற்பவர்!

கொள்கையிலே குன்றாக நின்றவர் – செயற்கைக்
கோள்விட்டுச் சிகரத்தை வென்றவர் – நாட்டை
வல்லரசாய் ஆக்கிடவே விளைந்தவர் – திரு
வள்ளுவரின் குறள்கற்றுத் தெளிந்தவர்!

மதங்கடந்து மனிதனாக வாழ்ந்தவர் – இளம்
மாணவர்க்கு வழிகாட்டி ஆனவர்! – நல்
உதவுகின்ற உள்ளத்தைப் பெற்றவர் – என்றும்
உயர்வான எண்ணத்தை விதைத்தவர்!

அணுகுண்டைப் பொக்ரானில் வெடித்தவர் – இந்த
அகிலத்தை வியக்கத்தான் வைத்தவர் – மனத்தில்
கனவுதனைக் காணத்தான் செய்தவர் – அந்த
கனவுதனை நனவாக்கச் சொன்னவர்!

விண்தன்னில் ஏவுகணை விட்டவர் – அவர்
வெற்றிமிகுச் சாதனைகள் புரிந்தவர் – கடமைக்
கண்ணியம்கட் டுப்பாடும் கொண்டவர் – அவர்
காலமெல்லாம் துணையின்றி வாழ்ந்தவர்!

எளிமையாக எப்போதும் இருந்தவர் – அவர்
ஏற்றமிகுக் கவிதைகளைத் தந்தவர் – பெரும்
வலிமையான உள்ளத்தைப் பெற்றவர் – நாட்டை
வளமையாக ஆக்கிடவே முயன்றவர்!

நதிகளையும் ஒன்றிணைக்கச் சொன்னவர் – மரம்
நடுவதற்குப் முனைப்பாக இருந்தவர் – தன்
மதியாலே ஊனமுற்றோர் நடந்திடச் – செயற்கை
மாற்றுமுறை கால்தன்னைத் தந்தவர்!

அவர்வழியைப் பின்பற்றிச் செல்லுவோம் – நல்ல
ஆக்கத்தை எந்நாளும் செய்யுவோம் – நான்குச்
சுவருக்குள் முடங்கியேக் கிடக்காமல் – சுற்றுச்
சூழலையும் இன்றேநாம் காப்போம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...