நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

இயல்பாக நடப்பதற்குத் தொடங்கும் போதோ
—-இருநண்பர் அருகினிலே வந்து சேர்ந்தார்
கயல்முள்தான் பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு
—-கடுகடுப்பைத் தருவதைப்போல் நெஞ்சிற் குள்ளே
முயலாமல் கிடைத்தந்தப் பணத்தாள் குத்தி
—-முகந்தன்னில் காட்டியது திருட னென்றே
அயல்வந்த அவர்களிடம் கிடைத்த செய்தி
—-அறிவித்த பின்னேதான் அமைதி பெற்றேன் !

என்னசெய்ய கிடைத்திட்ட அப்ப ணத்தை
—-எல்லோரும் தேநீரை அருந்த லாமா
என்றநண்பர் கருத்தேற்று சென்ற போது
—-எதிரிருவர் எம்முடனே சேர்ந்து கொண்டார்
முன்சென்ற இருவரிதைக் கேட்டே எங்கள்
—-முதுகோடு தாங்களுமே சேர்ந்து கொள்ள
பின்னிருவர் தேநீரின் கடையில் சேரப்
—-பிட்டிற்கு மண்சுமந்த கதையா யிற்று !

கிடைத்ததுவோ ஐம்பதுரூ தாளோ ஒன்று
—-கிளைபரவி சேர்ந்தவரோ ஒன்ப தின்மர்
வடையெடுத்த காகத்தின் சோகம் போன்று
—-வந்தாற்போல் போயிற்று இரட்டிப் பாக
கிடைத்தாலும் சொந்தமில்லா பொருளை ஏற்றால்
—-கிடைத்ததுபோல் ஏமாற்றும் சூதாட் டம்போல்
விடைபெற்றுப் போயிற்றென் பொருளைச் சேர்த்து
—-விளைவெனக்கு நற்பாடம் உங்க ளுக்கும் !


1 Comment

கி.தெய்வேந்திரன் · ஆகஸ்ட் 31, 2016 at 16 h 21 min

வரவு 50
செலவு 100 …..

நாளைல இருந்து நடை பயிற்சியே வேண்டாம் (நடைபாதையில் கேட்பாரற்று இருக்கும் பொருளே) ….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

நீதான் எந்தன் நிழல்

மௌனப் புன்னகை
கொட்டிய
உந்தன் வதனத்திலிருந்து
ததும்பி ஓடும்
அன்பின் வாசனையை
அள்ளிக் குடிக்கிறேன்…
அது
நீண்ட சஞ்சரிப்போடு
எந்தன் கரங்களில் நசிபட்டு
என்னைத் தாண்டி
நெடுதூரம் ஓடியது
ஆனந்தச் சாயல்கள்…

 » Read more about: நீதான் எந்தன் நிழல்  »

புதுக் கவிதை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

என் தேசத்தில் தேடுகின்றேன்
வறுமையற்ற வாழ்வாய்
எனக்கான சந்ததிகளில்
விழிகள் நிறைய
கண்ணீரோடு கையேந்தும்
சிறுவர்களின் கெஞ்சலும்

தோல்சுருங்கி
கைவிடப்பட்ட மூதாட்டியின்
முனகலோடும்

நடுங்கும் கைகளில்
கைத்தடியின் ஆதரவில்
கால்இடறி ஆதரவின்றி
விழப்போகும் முதியவரிடமும்
தேடுகிறேன்
வறுமையற்ற வாழ்வை.

 » Read more about: தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை  »

கவிதை

பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை

பூஞ்சோலை மணக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது.

பூவாக மொட்டுகள் துடித்திடவே.
பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே.

மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே
மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே

மேகமதைக் குயில்கள் அழைத்திடவே
மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே

கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே
காட்சிகளைக் கண்கள் பதித்திடவே

தென்றல் தேகத்தைத் தழுவிடவே
தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே.

 » Read more about: பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை  »