பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.

“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே,

“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.

“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ?” என்று ப்ரியாவைக் கேட்க,

ப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.

“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். ‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா ? இறந்திருப்பாரு. வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..