இயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மேருகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன. மனதைக் கொள்ளையடிக்கும் மலைச் சிகரங்களில் ஊதா நிறம் படர்ந்துள்ளதையும் விரிந்து கிடக்கும் பல நிறப் பச்சை புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.

ஷில்லாங்கை சீனாவிலுள்ள ஷங்க்ரிலாவுக்கு ஒப்பிடுகின்றனர். உலகின் கிழக்குப் பகுதியிலுள்ள ஸ்காட்லாந்து என்ற பெயரும் இதற்கு உண்டு. மேகங்களின் இருப்பிடம் என்றும் இதனைக் கூறுகின்றனர். தேவதைக் கதைகளில் வருவதைப் போன்று இங்குள்ள பச்சைப் புல்வெளிகளும், வியப்பூட்டும் வேகத்துடன் கீழே உள்ள பள்ளத்தாக்குகளுக்குப் பாய்ந்தோடும் கொப்பளிக்கும் நீரூற்றுகளும், அழகான ஓவியம் போன்று காட்சித் தருகின்றன. நளினமாகத் தோன்றும் நெளியும் மலைப்பாதைகளில் செல்லும்போது பார்க்கும் இடமெல்லாம் இயற்கையின் செழுமையைக் காட்டுகிறது.

கடல் மட்டத்திற்கு மேல் 1496 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் ஷில்லாங் மிகவும் நூதனமான கலாச்சாரங்களை உள்ளடக்கியது. பெரும்பாலும் மலைவாழ் மக்கள் இங்கு வாழ்கின்றனர். ‘யூ ஷில்லாங்’ என்ற உள்ளூர் தேவதையின் பெயரில் அமைந்தது ஷில்லாங். ஷில்லாங்கிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிகரத்தில் இந்த தேவதை வசிக்கிறது என்ற கற்பனைக் கதையும் இங்கு உண்டு. ‘காசிஸ், ஜெயிண்டியாஸ் மற்றும் காரோஸ்’ என்ற மூன்று வகை மலைவாழ் மக்கள் மேகாலயாவில் உள்ளனர். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் கிழக்கு காசி மலைகளின் மாவட்டத் தலைநகரமாக விளங்குகிறது. இங்கு மலைவாழ் மக்களின் கலாச்சாரமும் நவீனக் கலாச்சாரமும் இரண்டறக் கலந்துள்ளது என்பதை சுற்றுலாப் பயணிகள் காணலாம். ஷில்லாங்கின் மையப் பகுதியில் உள்ள ‘பாரா பசாரில்’ காசி பெண்கள் சில்லரைக் கடைகளை நடத்துவதைக் காணலாம். உள்ளூரிலேயே கிடைக்கும் காய்கறிகள், கனிவகைகள், பலவகை வெற்றிலை-பாக்குகளை விற்பனை செய்வதைக் காணலாம்.பாரம்பரிய உடையணிந்திருக்கும் இவர்கள், பாரம்பரியக் கலாச்சாரத்துக்கு அடையாளமாக பாக்கு மெல்லுவதையும், மெருகேற்றப்பட்ட பிழையில்லாத ஆங்கிலம் பேசுவதையும் காண முடிகிறது. உள்ளூர் மொழியுடன் கலந்த இந்தி பேசுவதையும் நாம் காணலாம்.

நாட்டின் பிற பாகங்களுக்கு செல்லும் வகையில் ஷில்லாங்கில் பேருந்து, ரயில், விமான வசதி உண்டு. கவுகாத்தியிலிருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஷில்லாங் செல்வதற்கு கொல்கத்தா, தில்ý மற்றும் முக்கிய நகரங்களிýருந்து விமானப் போக்குவரத்து உண்டு. கவுகாத்தியிýருந்து பேருந்து, டாக்சி வசதிகளும் உள்ளன. இந்தப் பயணம் மிகவும் அருமையானதாக சுற்றுலாப் பயணிகளுக்கு அமையும். காரணம், அடர்த்தியான வனப் பகுதகளிýருந்து கரடு முரடான மலைச் சாலைகள் வழியாகச் செல்லும்போது ஆழமான பள்ளத்தாக்குகளையும், வானத்தைத் தொடும் மலைச் சிகரங்களையும், குதூகலிக்கும் மலை ஓடைகளையும், வரிசையாக சீர்செய்யப்பட்ட வயல்வெளிகளையும் காணும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் ஷில்லாங் மனதை விட்டு எளிதில் அகற்ற முடியாத நினைவுகளைக் கொடுக்கும். வழியிலேயே வாழை, அன்னாசி மற்றும் பலாப்பழங்களை விற்கும் உள்ளூர்ப் பெண்கள் மýவு விலையில் விற்பதைக் காணலாம். ‘லாங் பா’ என்ற இடத்தில் புத்துணர்ச்சி தரும் தேனீரைப் பருகுவதற்கு சுற்றுலாப் பயணிகள் தவறுவதில்லை. இங்கிருந்து ஷில்லாங் நோக்கிப் பயணிக்கும் போது, சிறிய ஆறு ஒன்று கூடவே பயணிப்பது போலத் தோன்றும். இந்த ஆறு உமியம் ஏரியில் சென்று கலக்கிறது. இயற்கையின் அதிசயங்களில் இந்த பெரிய ஏரியும் ஒன்று. ஷில்லாங்கிýருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படா பானி என்ற இந்த இடத்தில் பலவித நீர் விளையாட்டுகளும்,சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஷில்லாங் ஒரு பெரிய நகரம். பரந்து விரிந்த பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைந்த ஷில்லாங்கில் பெரிய மலைகளும் உண்டு. மலையின் உச்சியை அடைந்து விட்டோம் என்று நாம் நினைத்தால், அது பொய்யாகிவிடும். அங்கிருந்து வேறொரு மலையின் துவக்கத்தை நாம் காணலாம். இது போல, கண்ணாமூச்சி மூலைகளைக் கொண்ட இடங்களை இங்கு நிறையக் காணலாம். உள்ளூர் வாசிகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், இங்கு போக்குவரத்து வசதிகள் உண்டு.

இந்த நகரத்தின் மையத்தில் ‘வாட்ஸ் ஏரி’ என்ற செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது. அசாமின் முன்னாள் தலைமை ஆணையர் வில்லியம் வாட்சின் நினைவாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது. ஏரியைச் சுற்றிலும் அழகிய தோட்டங்களும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதற்கான சிறிய உணவகங்களும், அருங்காட்சியகமும் உண்டு. இந்த ஏரியின் ஒரு முனையில் தாமரை தடாகமொன்று உண்டு. மேகாலயாவில் வாழும் மக்களின் பழங்கால வாழ்க்கை முறைகளைச் சித்தரிக்கும் அருங்காட்சியகத்தில் இந்த மலைகளில் கிடைக்கும் அரிய வகை தாவரங்களைப் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஏரிக்கு எதிரே ஷில்லாங்கின் மிகப் பழைய பிரம்மாண்டமான தேவாலயம் உள்ளது.

சர். அக்பர் சிடாரியின் மனைவியான மேரி சிடாரி நினைவாக அழகிய பூங்காவும் சிறிய உயிர்க்காட்சி சாலையும் ஷில்லாங்கில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். இந்தப் பூங்காவில் அழகிய தாவரங்கள் நிறைந்த தோட்டங்கள் காணப்படுகின்றன. இதனை ரசித்து முடித்த சுற்றுலா பயணிகள் சற்று உயரே சென்று பார்த்தால், கிரைனோலின் என்ற நீர் வீழ்ச்சிக்குச் செல்லலாம். இங்கு சுற்றுலா பயணிகளுக்கென்று நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. வில்வித்தைக்குப் பெயர்பெற்ற ‘ஆர்ச்சரி ஸ்டேக்ஸ்’ என்ற இடத்தில் பழங்கால வீர விளையாட்டாகக் கருதப்படும் வில்வித்தை போட்டிகள் இன்னமும் அன்றாடம் நடத்தப்படுகின்றன. நான்கு நிமிடத்திற்குள் 1500 அம்புகளை இலக்கு தவறாமல் செலுத்தும் இப்போட்டி இங்கு மிகவும் பிரபலம். நாட்டிலேயே சிறந்ததாகக் கருதப்படும் ஷில்லாங் கோல்ப் விளையாட்டு மைதானமும் இங்குதான் உள்ளது.

ஷில்லாங்கிýருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் சிரபுஞ்சி சாலையில் யானை நீர்வீழ்ச்சி உள்ளது. யானையைப் போன்று தோற்றமளிக்கும் பாறைகளிடையே உள்ள நீர்வீழ்ச்சியில் பச்சைப் பசேலென்ற சூரல் கொடிகள் படர்ந்து வனப்புமிக்கதாகக் காட்சியளிக்கின்றன. 135 மீட்டர் உயரத்தில் பிஷப் நீர்வீழ்ச்சியும், 120 மீட்டர் உயரத்தில் பீடன் நீர்வீழ்ச்சியும் இங்கு மிகவும் பிரபலம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பின்ரம் டென்த்லென் மற்றும் ஈகிள் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளைக் குறித்து கற்பனைக் கதைகள் பல உண்டு. சாகச சிந்தனை கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். சிரபுஞ்சி மார்க்கெட்டிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘நோக்காலிக்கை’ நீர்வீழ்ச்சியைப் பற்றி கதையொன்று உண்டு.

லிக்காய் என்ற பெண் குடும்பத்திற்காக சம்பாதித்து வீட்டை கவனித்து வந்தார். அவரது கணவர் வீட்டில் தங்கி குழந்தைகளை கவனித்து வந்தார். ஒரு நாள், வேலை முடித்து வீடு திரும்பிய லிக்காய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறிய கூடை ஒன்றில் சின்ன விரல் ஒன்று கிடந்தது. அதைக் குறித்து அவள் கணவனிடம் விசாரித்தபோது, தனது சக்களத்தியின் குழந்தையைக் கொன்று சமைத்து விட்டதாக அவர் கூறினார். இதைக் கேட்டதும் அப்பெண் அலறித் துடித்து வெளியே ஓடிவந்து இந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இந்த நீர்வீழ்ச்சிக்கு நோக்கýக்கா என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆயிரம் அடியிலிருந்து விழும் கின்ட்ரம் நீர்வீழ்ச்சி 50 அடி அகலத்தில் விழுகின்ற பிரம்மாண்டத்தை ரசிக்காதவர் எவரும் இருக்க முடியாது.

உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் சிரபுஞ்சி செல்வதற்கு மேகாலயா சுற்றுலாத் துறை ஒரு நாள் இன்பப் பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறது. சிரபுஞ்சியில் அதிக மழை பெய்வது குறித்து அனைவரும் அறிந்திருக்கலாம். ஆனால், இங்கு ஆழமான பள்ளத்தாக்குகளும், செழிப்பான பசுமை வெளியும், அரிய வகை பூக்களும், எண்ணிலடங்கா தாவர வகைகளும் இதுவரை கண்டிராத குகைகளும் உண்டு என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்குதான் வெல்ஷ் மிஷனரிகளும் ராமகிருஷ்ணா மடமும் தங்களது கல்விப் பணியைத் துவக்கினர் என்பது புதிய செய்தி. காசி மக்களுக்கு ரோமன் எழுத்துக்களை வெல்ஷ் மிஷனரிகள் கற்றுக் கொடுத்தனர். ‘கோ ரம் ஹா’ என்ற சுற்றுலா இடம் நூதனமான வடிவமைப்புக் கொண்ட பாறைகளால் ஆனது. ‘சோரா’ இன மக்களால் கொல்லப்பட்ட அரக்கனின் நினைவாக இந்த இடத்திற்கு இப்பெயரிடப்பட்டது என்ற கற்பனைக் கதை உண்டு. ‘டெய்ன்த் லேன்’ நீர்வீழ்ச்சிக்கு அருகே தீய சக்தி படைத்த பாம்பு ஒன்று கொல்லப்பட்டதாக ஐதீகங்கள் உள்ளன. இங்குள்ள ‘மாவ் சிண்ட்ராம்’ குகைகள் சிவலிங்க வடிவில் உள்ளன. அருகிலிருக்கும் நீர்வீழ்ச்சிகளிள் சத்தம் இந்தக் குகைகளில் எதிரொலிக்கிறது.

சில குகைகள், நீர்வீழ்ச்சிகள், பாறைகள் பற்றிய கதைகள் மயிர் கூச்செறிய வைப்பவை என்பதோடு இந்தப் பகுதியின் செறிவுமிக்க பழங்குடி பாரம்பரியம் பற்றி எடுத்துக் கூறுபவையாகவும் உள்ளன. பரவசமூட்டும் இந்தக் கதைகள், ஷில்லாங்கின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

தமிழில் : ஜாய் – அமுதசுரபி

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »