பாலி (இந்தோனேசியா)

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93 சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் இந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள்
முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்திய பிறகு இந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலி தீவுக்கு குடி பெயர்ந்தனர்.
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்…

1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்க படுகிறது.
Nyepi day என சொல்கிறார்கள்.
மார்ச் 12ம்தேதி இந்த மௌன தினம் வருகிறது.
இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கபடுகிறது.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது.
பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும்.
யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள்.
வீட்டில் இருந்த படியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான்.
பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன.
புராணங்களில் வரும் அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆண் , பெண் என இரு பாலருக்கும் தேசிய உடை ‘வேஷ்டி’ தான்.
எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது.
இந்தியாவில் கூட சில கோவில்களில் தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற).
ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்துதான் செல்ல வேண்டும்.

4. பாலியின் அரசியல் சமூக, பொருளாதார, கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana எனும் கோட்பாட்டின் படிதான் அமைந்துள்ளது.
அதை தான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள்.
Parahyangan – Pawongan – Palemahan என பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரியநமஸ்காரம்.
அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்றுவேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.
அதே போல மூன்று வேளையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்ல வேண்டும்.
பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது.
முஸ்லிம் மதநாடான இந்தோனேசியாவில் அனைத்து மதகோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.
ஆனால் இந்தியா மதசார்பற்ற நாடு, இருந்தாலும் இந்துக்களுக்கன்றி முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது.

7.இந்தோனேசியாவின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசிவிளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய பங்கு வகிக்கிறது, பாலிதீவு முழுவதும் அரிசி வயல்கள்தான் இருக்கின்றது.
பாலிமக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீதேவி, பூ தேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்குதான் படைக்கிறார்கள்.
அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இருதெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள்.

9 வது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதி முறைகளை இந்து பெரியோர்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.
அதற்க்கு Subak System என பெயர்.
இங்கே நீர்பாசனம் முழுவதும் கோயில் பூசாரிகளின் கட்டுபாட்டில்தான் இருக்கும்.
உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது.
இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.
9. பாலி இந்துக்கள் பூஜை செய்யும்பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதில்லை.
இன்றும்கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன் படுத்துகிறார்கள்.

ராமாணயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ராமாணய ஓலை சுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடை பெறும்.

10. அனைத்து திருவிழாகளிலு ம் பாலிநடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள்.

இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
உலகின் அழகியதீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது.
அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கைமுறை, பாரம் பரியமிக்க ஹிந்துகலாச்சாரம், நடனம், இசை என இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

கட்டுரை

எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்

இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர்.

நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம்.

தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை.

 » Read more about: எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்  »

ஆன்மீகம்

தர்மம் என்றால் என்ன?

இந்து சமய உண்மைகள்

நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன.

 » Read more about: தர்மம் என்றால் என்ன?  »