“இது நமது சமூக அமைப்பிற்கு ஒத்து வருமா அன்வர்?”

“இந்த பிரச்சனையை சமூக அமைப்போடு ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்ல அலி…”

“ஏன்…?”

“உணர்வு சார்ந்த பிரச்சனைகல சமூக கட்டுபாட்டுடன் ஒப்பிட்டா ரிசல்ட் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு பாதகமாகவே அமையும். இது நியாயமா தெரியல”.

“நீ என்ன சொல்ல வர புரியல…”

“சமூகமும் சமூகம் சார்ந்த கட்டுபாடுகளும் மனிதர்களாகிய நாமாக வகுத்துக் கொண்டது இதை மீறும் சக்தி மனித உணர்வுக்கு உண்டு. உணர்வுகல புரிஞ்சி மதிக்கும் தன்மை நம்மால் வரையறுக்கப்பட்ட அமைப்புக்கு வேணும் இல்லேன்னா விளைவுகள் கெடுதியாகவே முடியும்…”

“அப்போ நபிலா செஞ்சது சரின்னு பஞ்சாயத்துல சொல்லப்போறியா…”

அன்வரும் அலியும் எழுந்து தன்மீது படிந்திருந்த மண்ணை தட்டிக்கொண்டார்கள். மாலை கதிரவனின் தூரத்து ஒளி கடற்கரையை அழகு படுத்தி இருந்தது. தென்றல் என்று சொல்ல முடியாத அளவிற்கு காற்று சற்று அழுத்தமாக வீசியது. இங்கும் அங்குமாக சிதறி களைந்துக்கொண்டிருந்த ஜனங்களோடு நண்பர்கள் இருவரும் நெறுக்கமாக நடக்கிறார்கள்.

“அலி, நபிலா நமக்கு உறவு பெண்ணல்ல இருந்தும் நாளை நாம் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம். சுமூக சீர் திருத்தத்திற்காக நம்மை நாமே ஓரளவு தயார் படுத்திக் கொண்ட பிறகு ஊரில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் பஞ்சாயத்தார் நம்மை அழைக்கிறார்கள். நம் கருத்தை வெளிபடுத்த அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. நபிலா செஞ்சது சரின்னுதான் பஞ்சாயத்துல சொல்லப் போறேன்.”

*** *** ***

“பஞ்சாயத்துல என்ன சொல்வாங்கன்னு நெனக்கிற…”

“இது தவறான போக்குன்னு நபிலாக்கு தண்டனையா அபராதம் விதிப்பாங்கன்னு நெனக்கிறேன்…”

“தண்டனை கொடுப்பதற்கோ, அபராதம் விதிப்பதற்கோ இதில் என்ன இருக்கு.. முப்பத்தி மூன்று வயது வரை நபிலாவைப் பற்றி சிந்திப்பதற்கு யாருமில்லே. வாலிப உணர்வுகளோடு பல பரிச்சை நடத்தும் வெகு ஜன தொடர்பு சாதனங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணால் எவ்வளவு காலத்துக்கு ஈடு கொடுக்க முடியும். எவருமே தன்னைக் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் உடம்பு எதிர் பார்க்கும் உணர்வுகள் முடங்கிக் கிடக்குமா?என்ன? பாவம் நபிலா.”

“இத்துனைக் காலம் பொருத்துக் கொண்டிருந்தாள். இப்போ இயல்பு அவளை வென்றுடுச்சி…”

“அதுக்காக தன் வயதுக்கு ஒத்தவனோடு ஓடுவது முறையா அன்வர்…”

“ஓடிட்டாங்கன்னு மொட்டையா சொல்லாதே இருவரும் திருமணம் செஞ்சிக்கிட்டாங்கன்னு நம்பகமான செய்தி வந்துடுச்சி…”

“திருமணம் செஞ்சிக்கலாம்னா ஓடலாம் என்று சொல்லவரியா…”

“நான் சொல்ல வரத புரிஞ்சிக்க அலி. அக்கறையோடு இந்த சமூகம் நபிலாக்கு ஒரு வாழ்க்கைய அமைத்துக் கொடுத்திருந்தா நம்முடைய இந்த சந்திப்பும் நாளைய பஞ்சாயத் தும் தேவையில்லாம போயிருக்கும். சமூக அமைப்பு – சமூக அமைப்புன்னு விவாதிக்கிறோம். இது ஒருவர் மீது ஒருவர் அக்கரைக் கொள்வதா இருக்க வேண்டும்.. மிருகங்களும்,பறவைகளும் கூட கூட்டமாக வாழ்கின்றன அதை யாரும் சமூக அமைப்பு என்று கூறமாட்டோம்.”

“நாம் பேசும் சமூக அமைப்புக்கூட இதற்கு ஒத்துதான் இருக்கு. பிறர் மீது அக்கறைக் கொள்ளாத மனப்போக்கு இருக்கும் வரை நாம் கட்டுப்பாடாக நினைக்கும் காரியங்களுக்கு எதிர் புரட்சி நடக்கத்தான் செய்யும்…”

“நபிலாவின் இந்த போக்குக்கு சமூகம் தான் காரணமா…”

“நிச்சயமாக…”

“அது எப்படி சொல்ல முடியும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் குறுக்கிடும் போது பிறர் மீது அக்கரைக் கொள்ளாததை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்.”

“பிரச்சினைகளை காரணங் காட்டி நீ சமூகத்திற்காக வாதாடினால் பிறகு பஞ்சாயத்து எதற்கு… குற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிய மாட்டோம் ஆனால் தண்டனை மட்டும் கொடுப்போம் என்பது தான் நீதியா…நீயும் நானும் கூட பிரச்சனைக்கு அப்பார்பட்டவர்களல்ல, ஒன்றாக படித்தோம் ஒன்றாக வேலை தேடி அலைகிறோம், கனமான ஏமாற்றத்துடன் திரும்பும் நாட்களில் நமது பிரச்சனை எவ்வளவு ஆழமானது என்பதை உணர்கிறோம். இருப்பினும் நபிலா என்ற ஏதோ ஒரு பெண் மீது அக்கரைக் கொள்கிறோம்.”

*** *** ***

“இதுதான் சமூகத்தின் மீதான அக்கரை. இதுதான் மனிதத்துவம் அலி..”

“நாளை நபிலா நம்பியவனால் கை விடப்பட்டால்…”

“அப்படி நடக்கக்கூடாது என்று பிரார்த்திப்போம்.”

“மீறி நடந்தால்…”

“நாம் தான் அவளை அரவணைக்க வேண்டும் கடந்தக்கால சமூக பொருப்பின்மைக்கு அதுதான் பிராயச் சித்தமாக அமையும்.”

“நாளை பஞ்சாயத்தில்…”

“என் கருத்தை வலியுறுத்தி பேசுவேன்.”

இருவரும் விடைப்பெற்று பிரியும் போது இருட்டி இருந்தது. தூரத்தில் மின்னும் மின் விளக்குகளை அலி நோக்கினான் எங்கோ தன் வாழ்க்கைக்கு விளக்கேற்றிக் கொண்ட நபிலா நினைவுக்கு வந்தாள். அன்வரின் பக்கம் சிந்தனை திரும்பியது. மனிதத்துவத்தின் மீத அக்கரையுள்ள நண்பன். இளைஞர்கள் இப்படி உருவானால் நபிலாக்கள் காலம் கடத்த வேண்டியதில்லை ஓட வேண்டியதில்லை என்று தோன்றியது.

நாளை பஞ்சாயத்தார்கள் சிந்திப்பார்கள்.

*** *** ***

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..