தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு

செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு – அது
நல்வாழ்வில் திறக்கின்ற கதவு கதவு.

பொன்கன்னம் சிவந்திருக்க
புதுவண்ணம் சேர்ந்திருக்க
என்எண்ணம் அதன்மேலே முத்தம் முத்தம் – அது
எழில்வண்ணம் பெறவேண்டும் நித்தம் நித்தம்.
20160425_1439
கண்மலர்கள் விழித்திருக்க
கருங்குவளை பழித்திருக்க
என்மனது ஏங்குதடி குயிலே குயிலே – என்
ஏக்கமெல்லாம் தீர்த்துவிடு மயிலே மயிலே.

சந்தனத்தைக் குடைந்தெடுத்து
சங்கீதத்தின் மடைதிறந்து
உந்தனிடை ஆனதுவோ கிளியே கிளியே – அதில்
உறவுகொள்ள துடிப்பதென்ன விழியே விழியே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்