பொங்கலோ பொங்கல்

தை திங்கள் முதல் நாளாம்
தமிழர்க்கெலாம் திரு நாளாம்
ஏர் முனையில் வாழ்பவர்க்கு
பேர் புகட்டும் பெரு நாளாம் !

சிற்றெரும்பு வட்டமிட
முற்றமதில் மாக் கோலமிட்டு
வற்றாத வாழ்வு பெற
பற்றுக் கொண்ட பாமரரும்
சுற்றங்களும் சூழ்ந்து நின்று

செங்கதிரோன் முகம் பார்த்து
செங்கரும்பு புறம் நட்டு
சேய் தழுவும் மார்பினைப் போல்
அதை தழுவி மஞ்சள் இட்டு
மா இலைத் தோரணங்கள்
மங்கலமாய் வாசல் கட்டி

வண்ணக் கோலம் நடுவினிலே
வகையாக அடுப்பு மூட்டி
வளைக் கரங்கள் கை கூட்டி
புத்தரிசி பானையிட்டு
பொங்கிவர பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கல் என
பூரிப்பில் கொளை இட்டு
தலை வாழை படையல் போட்டு

உண்டி தரும் உழவனுக்கும்
அண்டி வாழும் ஆவினுக்கும்
நன்றி சொல்லி நாம் மகிழ்ந்து

ஏர் தந்த சீதனத்தை
பார் கண்ட எளியவர்க்கு
கார் கொண்ட உள்ளத்தால்
சீர் கொண்டு பகிர்ந்தளித்து

பொங்கிடும் அவர் புன்னகையில்
புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

பெண்ணான வெள்ளிப்பூ

சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..

 » Read more about: பெண்ணான வெள்ளிப்பூ  »

மரபுக் கவிதை

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு 
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!

ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !

 » Read more about: கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!  »

புதுக் கவிதை

பேரொளி பிறந்தது!

பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!

பாரெலாம் தீன் ஒளி
பரவிப் பளிச்சிடப்
பூரணமாகி யோர்
புத்தொளி பிறந்தது!
காரணர் முஹம்மத்
எனுமொரு குழந்தை
ஆமினா வயிற்றில்
அழகாய்ப் பிறந்தது!

 » Read more about: பேரொளி பிறந்தது!  »