mittaaimalaiஇராஜகவி ராகில் எழுதிய முதல் நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘ தலைப்பே பெரும் இனிப்பு .

முதலில், பேரா. துரை மனோகரன் அவர்களின் அணிந்துரை நாவலுக்கு மகுடம் சூட்டுகின்றது .

“இந்நூலில்தமிழ்ப் பாத்திரங்களும் முஸ்லீம் பாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இப்பாத்திரங்கள் இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி ஒருவருக்கு ஒருவர் உதவி அவர்கள் வாழ்வதை நாவலாசிரியர் நாவலில் அழகாகக் காட்டுகிறார். பொதுவாகப்ப ண்பினை ராகிலின் பிற படைப்புகளிலும் காண முடிகிறது ” என்று பேராசிரியர் கூறியிருப்பது நாவலுக்கும், நாவலாசிரியருக்கும் பெருமை சேர்க்கின்றது .

“இந்த நாவல் இன ஒற்றுமை , நட்பு போன்ற மகத்தான அம்சங்களால் பின்னப்பட்ட ஓர் உன்னதமான காவியம் உணர்வுகளை அற்புதமாகப் படம் பிடித்து
மனதோடு பேசி உயிர் உணர்வுகளோடு உறவாடி எம்மோடு கலந்துவிடுகிறது .” வனிதாதேவா வாழ்த்துரை உண்மை சொல்கிறது.

நூலை யாழ் தமிழ் மகள் மணிமேகலை கைலைவாசன் அவர்களுக்கு சமர்ப்பித்திருப்பது பெருமைக்கும் பாராட்டுக்குரியது.

உயிரோட்டமான கதை படித்திருக்கிறேன் .. ஆனால் உயிரோட்டம் உள்ளவர்களையே கதாப்பாத்திரங்களாகக் கொண்டு சித்தரித்திருப்பது மிக அருமையாக உள்ளது .

நாவல் படிக்கும் போது உடன் பயணிப்பது போன்ற உணர்வை கொண்டு வருகிறது. அற்புதம். குமார்தாசன், பூரணி, நர்மதா, இக்பால் அனைத்து கதாப்பாத்திரங்களும் நாவலில் வாழ்ந்திருக்கின்றார்கள் .

குறிப்பாக குமார் தாசனாகவே கதாசிரியர் வாழ்ந்திருக்கிறார் .

இந்த நாவலில் கதைக்குள் இடைச் செருகலாக கதைக்கு ஒப்ப கவிதைகளும் பாத்திரங்கள் ஊடாக இயல்பாக இடம் பெறுகின்றன

“நர்மதா ! நீ மட்டும் எனக்கு மனைவியானா
நாம் புது உலகம் செய்யலாம்
புன்னகையால் மழை பெய்யலாம்.
நட்சத்திர வெளிச்சத்த உண்ணலாம்.
பூக்களின் வாசத்தை சுவாசிக்கலாம்.
தேனை நாவால வாசிக்கலாம் ” குமார் தனக்குள் கரும்புத் தோட்டம் உண்டாக்கினான்.

இப்படி இயல்பாக நாவல் முழுவதும் ராஜகவியின் ராஜ நடை நிறைந்து காணப்படுவது நாவலுக்கு உரை நடையில் ஒரு புதிய தளத்தினை உண்டாக்கி விடுகிறது ..

நாவல் புதிய அனுபவத்தினையும் புதிய களத்தினையும் வாசகர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது

மனதைக் கவர்ந்த கவிதைகள் பல அவற்றுள் ஒன்று
‘”வாழ்க்கை
அழகிய கவிதை நூல்
சிலர் தான் படித்து இரசிக்கின்றார்கள்
பலர்
கிழித்து வீசிவிடுகிறார்கள் “‘

கவிதை, சிறுகதை , நாவல்கள் என தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ராஜகவிஇது போன்ற பல பரிணாமங்களை மென்மேலும் படைத்து பார் போற்றும் பல்துறைசார்ந்த படைப்பாளியாக உலக வலம் வருவது தமிழனுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறது .

எல்லோருமே வாசிக்க வேண்டிய நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘

நூல் கிடைக்குமிடம்
டிஸ்கவரி புக் பேலஸ் ,
கே கே நகர் (மேற்கு )
சென்னை .

– ராதிகா ரவி –


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »