வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில்
…… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் !
தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித்
…… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ !
ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும்
…… உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் !
ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல்
…… ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே !

கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு
…… கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு !
உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் !
…… உணர்வொன்றிப் பேசுகின்ற தன்மை வேண்டும் !
பலகற்றும் பயனில்லை பகையைத் தேடும்
…… பரிதாப நிலையுற்றால் உள்ளம் வாடும் !
சலனத்தைத் தருகின்ற பேச்சால் நெஞ்சைச்
…… சரிபாதி ஆக்காத நாக்கே வேண்டும் !

பொல்லாதார் பேசுகின்ற பேச்சைக் கேட்டுப்
…… போதுமிந்த வையகத்தில் பட்ட பாடு !
எல்லாமும் எமக்கிங்கோர் பாடம் என்றே
…… எண்ணிநிதம் பேசவேண்டும் இனிமை பொங்க !
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வேறு பாடு
…… கண்டிடலாம் அவர்பேச்சை வைத்து நாளும் !
வில்லேந்தும் வார்த்தைகளால் விளையும் துன்பம்
…… விறகாகிப் போனாலும் மனத்தைக் கொல்லும் !

மண்ணில்நாம் கொண்டவெழில் மறைந்து போகும்
…… மறையாத நினைவாகப் பேச்சே வாழும் !
எண்ணத்தைச் சரிசெய்து பேச வேண்டும்
…… எதிரிக்கும் நம்பேச்சும் இனிக்க வேண்டும் !
உண்ணத்தான் உணவின்றி வாடும் போதும்
…… உலகத்தின் நன்மைக்காய்ப் பேச வேண்டும்!
பண்போடு பேசுகின்ற வார்த்தை கேட்டுப்
…… பணியாத மனமும்தான் பணிய வேண்டும் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 30

தொடர் 30

இதுநாள் வரையில் ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவதற்கான சில வழிமுறைகளைக் கண்டோம்..

இப்போது ஒரு காட்சி…

நீங்கள் வெளியூரில் வேலைசெய்கிறீர்கள். விடுமுறையை ஒட்டி தொலைதூரத்தில் உள்ள உங்களது சொந்த ஊருக்கு செல்லப் பேருந்து நிலையம் வருகிறீர்கள்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 30  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 29

தொடர்  29

இயற்கையின் ஒவ்வொரு நுட்பத்தில் இருந்தும் ஹைக்கூவை வடித்தெடுத்தார்கள் ஜப்பானிய கவிஞர்கள். இயற்கையை ஆராதிப்பதில் அவர்களுக்கு இணை அவர்களே. ஆகவே தான் ஹைக்கூ வாயிலாக இயற்கையையும்..இறைவனையும், ஒன்றாக கண்டார்கள்..

ஜென் என்பது மதமல்ல என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தி விட்டோம்..ஆனால் ஆசான்களும்,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 29  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 28

தொடர் 28

ஹைக்கூவில் உத்திகள் என்பது ஹைக்கூவை வடிவமைக்க பயன்படுகிறது. பொதுவில் ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பம் வருமாறு அமைப்பதும், முரணாக அமைப்பதுமே உத்தி முறையாகும்.

எதுகையில் அமைப்பது மோனையில் அமைப்பது என அதுவும் உத்திமுறைகளாக சொல்லப் படுகிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 28  »