ஆசிர்வதிக்கப்பட்ட பூமி
அவதாரபுருசர்கள்
அவதரித்த
புண்ணிய பூமி…..

இங்கிருந்துதான்
ஓடுகிறது
வேதங்களை படைத்த
தேவதூதர்களின் நதிக்கரைகளில்
இரத்தக்காட்டாறு..!

பழமைக்கும்,.
புதுமைக்கும் மத்தில்
பலியாடுகள்
இந்த குழந்தைகள்.,.

சிலுவை சுமக்க
கற்றுக்கொடுத்தவர்களுக்கும்
காட்டிக்கொடுத்தவர்களுக்கும்
மத்தியில்
பந்தாடப்படுகிறது
பலஸ்தீனம்..!

வல்லாதிக்க கரங்களில்
இரு குழந்தைகள்
ஒன்று
ஆயதக் கரங்களில் பிறந்த
கள்ளக்குழந்தை..

மற்றொன்று
சவக்குழியில்….!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஹைக்கூ

மலர்வனம் 8

ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்
 1. மழைத்துளிகளை
  சுமந்து கொண்டிருக்கும்
  கார்காலச் சிலந்தி வலை.
 2. இலையுதிர்காலக் கிளை
  தண்டுகளெல்லாம் மின்னுகிறது
  வைகறைப் பனி.
 3. வானத்தில் நாற்று நட
  கால்களைப் கவ்விப் பிடிக்கும்
  சேற்று வயல்.
 » Read more about: மலர்வனம் 8  »

மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »