கவிதை

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு
பழகுகின்ற போதினில்
என்புஞ்சதையும் உள்ளதுபோல்
இருவர்நட்பும் அமையுமே.

எந்தநாளில் எந்தநேரம்
என்னதீமை நேரினும்
அந்தநாளில் அந்தநேரம்
அதனைப்போக்க நண்பனே

மின்னல்போல வந்துமுன்னே
இன்பஞ்சேரச் செய்வனே.

 » Read more about: நட்பு  »

கவிதை

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!

விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!

உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!

எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !

உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!

 » Read more about: ​உச்சிக் குளிருதடா!  »

கவிதை

கன்னியே

சிலைபோல் மேனி சிரித்தால் பூ நீ
சிந்தனை வளைக்குதடி – கடல்
அலைபோல் உந்தன் நினைவே எந்தன்
அடிமனம் துளைக்குதடி

கண்ணே உன்னைக் காணக் காணக்
கனவுகள் வளருதடி –

 » Read more about: கன்னியே  »

கவிதை

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015)

விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும்
… விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை
அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை
… அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர்
நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே

 » Read more about: அப்துல் கலாம்  »

கவிதை

வைரமுத்தை தோற்கடிப்பேன்…

திணரவைக்கும் திமிராலே
திரும்பி பார்க்க வைத்தாய் நீ
கிறங்கடிக்கும் சிரிப்பாலே
விரும்பிப் பார்க்க வைத்தாய் நீ

உன் சின்னஞ்சின்னஞ் சிணுங்களிலே
இளையராஜா இசை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி நீபேச
கவிதை கோடி நான் கோர்த்தேன்

மாசி மாத காற்றைப்போல்
மனசுக்குள்ளே நீ வீசு
உன்னை எண்ணி உயிர்த்தேனே
ஒற்றை வார்த்தை நீ பேசு

வாசப் பூவே நீ கேட்டால்
வானில்கூட பூப்பறிப்பேன்
வாழ்வின் பொருளே உனக்காக
வைரமுத்தை தோற்கடிப்பேன்

சாடையாலே நீ சொன்னால்
சாவைகூட சாகடிப்பேன்
கைகள் கோர்க்க நீ வந்தால்
காலின் கொலுசாய் நானிருப்பேன்

 » Read more about: வைரமுத்தை தோற்கடிப்பேன்…  »

கவிதை

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !

அலங்கார நடைபோடும் தேவதையே –

 » Read more about: அம்மனைத் தேடும் அழகுரதம்  »

கவிதை

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு
என்நெஞ்சில் வந்தவன்
திருமகன் என்று வருவான்

கார்கொண்ட வண்ணமும்
கனியிதழ் வாய்கொண்டு
கனிமுத்தம் என்று தருவான்

நேர்கொண்ட வீரமும்
கொடை அன்புகொண்டவன்
நிம்மதி என்று தருவான்

போர்கொண்ட வேங்கையாய்
புறங்காணா வேந்தனாய்
புலியாக வாழும் வீீரன்

சீர்கொண்டு வருவானோ
சிலையாநான் வாடி
சிந்தையில் அவனை வைத்தேன்

பார்வென்று தார்மாலை
சூடிவரும் போதிலே
பரிசொன்று நான் சூடுவேன்

 » Read more about: வேங்கையாய் வீரனாய் வருவான்  »

கதை

நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே!

 » Read more about: நன்றி மறந்த சிங்கம்  »

By Admin, ago
கவிதை

அன்புள்ள நண்பிக்கு

அன்பெனும் சொல்லுக்கு
அகராதியை விஞ்சிய
அர்த்தம் நீ …

உன் கைப்பிடி அழுத்தங்கள்
உதிர்ந்து போன நாட்களை
உயிர்ப்பித்து தந்தது….

தலை வருடிய சுகம்
தாயினன்பை என்னுள்
தடவிச் சென்றது…

 » Read more about: அன்புள்ள நண்பிக்கு  »