ஹைக்கூ துளிகள்

சிறுவரிக் கவிதைகள்

மண்ணில் புதைந்தாலும் விண்ணோக்கி எழுவோம் விதைகள்! மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி, எழுத்தாளன் முகத்தில்! புத்தக வெளியீடு! மூச்சைவிற்று வாழ்க்கை நடத்துகிறான் பலூன்காரன்! கசக்கிப் பிழிந்தாலும் கை மணக்கச் செய்வோம் பூக்கள்! எவ்வளவு மது அருந்தினாலும் யாருக்கும் கஷ்டங்கள் கொடுக்கமாட்டோம் வண்டுகள்! கடலில் முகம் பார்த்தால் கரைக்கு இழுத்துச் செல்கின்றன அலைகள் நிலா! குடியிருந்ததை, கூடுகட்டி வாழ்ந்ததை கண்டுகொள்ளாமல் செல்கின்றனவே பறவைகள் பட்டமரம்! என்னைப் புதைத்து உன்னை உயர்த்துவேன்! (மரங்களிடம்) வேர்கள்!

ஹைக்கூ துளிகள்

ராஜகவி ராகில் – கவிதைகள்

பெண் விடுதலை பற்றி பேசியவன் பையில் வீட்டுச் சாவி ஓடையாக இருந்தாலும் உன்னை நதியாக்குகிறது நம்பிக்கை நம்பிக்கை உதிர்கின்ற போதுதான் நிகழ்கிறது முதல் மரணம் நிலம் உழுகின்ற உழவனைகிழித்து விடுகிறது சமூக ஏர் பூமிக்கு மேல் புதை குழி கட்டில் உழவனை நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது நெற்கதிர் கூட ஏழையைச் சாப்பிட்டு ஏப்பமிடுகிறது சோறு

ஹைக்கூ துளிகள்

கவிநுட்பத் துளிப்பாக்கள்

1 ” பாட்டியின் சேலை…! கிழிந்தும் உதவியது பேரனுக்கு தொட்டில்” 2 குழந்தையை சுமந்தாள் கூடவே ஒட்டிக்கொண்டது தாய்மை 3 மலர்ந்தது ரோஜா பறிக்கும்  முன் முத்தமிட்டது வண்ணத்துப் பூச்சி 4 மரத்தில் குழந்தை சிற்பம் அணைத்து முத்தமிட்டாள் குழந்தை இல்லா தாய் 5 புதுமைப் பெண்ணோ தனிமையில் செல்கிறது நிலா 6 “நட்சத்திரம் சிரித்ததோ சிதறிக் கிடக்கிறது மெரீனாவில் முத்துக்கள்” 7 “பூந்தோட்டம் பசுமையை மேய்கிறது விழி” 8 Read more…

ஹைக்கூ துளிகள்

குறுங்கவிதைகள்

இந்த வருட ஒவியப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது உன் பாதச்சுவடுக்கு. உன்னை சுமந்து செல்கிற சந்தோசத்தில் தேய்ந்து போகிறது செருப்பு. ஒடுக்கபட்டவன் என்று ஒதுக்கியது சர்க்கார் மட்டுமல்ல சமுதாயமும் தான் குப்பைத்தொட்டிதானே என்று கேவலமாக நினைக்காதீர் அது பல குழந்தைகளுக்கு கருவறை பாவம்! அவர்கள் பைத்தியகாரர்கள் போயும் போயும் ஒரு நாற்காலிக்காக அடித்துக் கொள்கின்றனர். கொன்று குவித்தது இராணுவ அரசு அழுது குமுறியது தமிழக அரசு மனதாரச் சிரித்தது Read more…

ஹைக்கூ துளிகள்

தீபம்

 வறண்டு கிடக்கும் வயல் வெடித்திருக்கிறது பனிக்காற்றில் உதடு!  பாய்ந்து வரும் காளை வலுவாய் பாய்கிறது தடைச் சட்டம்!  குத்திக் கீறிய காளை பொல பொலனு கொட்டுகிறது கொம்பிலிருந்த மண்!  வறண்ட நிலம் பதிந்து கிடக்கிறது பாதச் சுவடுகள்!  கூரைமேல் தென்னையோலை பொத்தென்று விழுகிறது காற்றில் முருங்கை!  வயலின் நடுவே பனைமரம் உயர்ந்து நிற்கிறது அலைபேசி கோபுரம்!  பெரு வெள்ளம் மூழ்கிப் Read more…

By Admin, ago
ஹைக்கூ துளிகள்

நிழல்கள்

1. வாழும் கடவுளை வீதியில் விட்டு விட்டு கோவிலில் தேடுகிறான் “இல்லாத கடவுளை ” 2. நிழல் தரும் மரங்கள் தான் நிம்மதியை தரும் என்பதை எப்போது உணர போகிறான் ?? நவீன ரோபோ மனிதன் !!?? 3. பத்து நிமிட சுகம் பரிசளிக்கும் நரகம் அப் பாவியாய் பாழும் பூமியில் அனாதை தெய்வங்கள் !!! 4. கட்டிலுக்கு விலை போனவர்கள் கண்ணீருக்கு விற்று விட்டனர் “அனாதை குழந்தைகள் ” Read more…

கவிதை

பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்

அனாதையாக கிடக்கிறார் கோடிகளின் அதிபதி சாலை விபத்து  ! பயண களைப்பு நிழல் தேடுகிறான் விறகுவெட்டி  ! சாலையில் பணப்பை மரித்து போனது மனசாட்சி  ! வாழ்க்கை பயணம் புதிய தேடல் ஆரம்பம் முதலிரவு   ! திரும்பி பார்க்காத தொகுதி திருந்திவிட்ட மக்கள் தேர்தல் புறக்கணிப்பு சர்க்கரை இருப்பு இல்லை காட்டிக்கொடுத்தது கூட்டமாய் எறும்புகள் நிலாச்சோறூட்டும் அம்மா நித்தம் ஏங்கும் சிறுவன் எதிரிலே அனாதை விடுதி படமெடுக்கத்தான் வந்தது யாரும் Read more…