புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை சீதனமாய் பெற்றன்று வெண்ணிறத்தோலுடையான் விட்டுசென்ற பசுமை நீ… பன்னிற மொழியுடையோர் பாரதநிறம் சேர்த்து கண்ணிறச் சக்கரம் சுழன்ற காண்போரின் முத்திரை நீ… மண் நிறக்கடை எல்லை மதிற்ச்சுவர் முன் நின்று பொன்னிற ஒளிதனிலே மின்னிடும் முச்சுடரே… அந்நிய நிறத்தோனிடம் அடிமை நிறம் இல்லையென உன் நிற ஒளி வீசும் ஒப்பில்லா முகவரியே… எம் தேச நிறமென்றும் எக்கு திக்கும் புகழாட உம் கோசக்குரல் வழியே உரக்கச்சொல் சுதந்திரமே… Read more…

புதுக் கவிதை

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா என விளிப்பது அவனுக்கு பிடிக்கும். அவன் என் மூத்த சகோதரன். கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாகிக் கொண்டிருந்தான். படுக்கையில் விலகித்தெரிந்த அவன் கொலுசுக் கால்களை பார்த்துவிட்டு முதன்முதலில் அதிர்ச்சியானவன் நான்தான். சலவை செய்த உணர்ச்சிகளை அடுக்கி வைத்திருக்கும் எங்கள் வீட்டு அலமாரியில் அவனுக்கான பெண்ணுடை இல்லவே இல்லை. நான்தான் என்வீட்டின் கதவாக இருந்தேன். என்னைத் திறந்து கொண்டுதான் அவன் இறுதியாக வெளியேறிப் போனான். சக்தி சிலநேரம் தனித்திருக்கிறாள். Read more…

புதுக் கவிதை

நேற்று பெய்த மழையில்…

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த கவிதை மழை வெவ்வேறு காலங்களில் பெய்தாலும் என் இறந்த காலத்தைத்தான் ஈரமாக்கிவிட்டு போகிறது ஒற்றைக் குடை இருவர் பயணம் அனாதை சாலை சீதளக்காற்று மெல்லிய உரசல் பகல் இரவு புணர் பொழுது சொர்க்கம் பற்றிய சந்(தேகம்) தீர்ந்தது இன்றோடு!

By ஆயுதா, ago
புதுக் கவிதை

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே மயங்குகிற அடிமையே ! எதுகுடித்தால் இன்பமெனில் மதுகுடித்தால் இன்பமென்பாய் ; மதுகுடிக்கும் உன்னுயிரை மயக்கத்திலே நீயிருப்பாய் ; அதுகுடிப்பது உன்னுயிரை அடுத்தடுத்து உம்முறவை ; இதுகுடித்து ஏப்பமிடும் எல்லையிலாத் துன்பம்தரும் ; மதுகுடித்தப் போதையிலே மயங்குகிறப் பேதையிரே ! சதிசெய்யும் சாத்தானாய் சந்ததிக்கே ஊறுசெய்யும் , மதிமயக்கி உமையழித்து மானமதைக் கெடுத்துவிடும் . மதுவரக்கன் கைபிடிக்க மனமதுவோ அதிலயிக்க , பதியாக வாழ்பவரைப் பாழ்படுத்த வந்ததுவே ! Read more…

புதுக் கவிதை

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில் கரியமிலவாயு நான் , பிராணவாயு நீ ! பருகும் நீரில் ஹைட்ரஜன் நான் , ஆக்சிஜன் நீ ! எரியும் விளக்கில் வெப்பம் நான் , வெளிச்சம் நீ ! மலரும் பூவில் மகரந்தம் நான் , மதுவோ நீ ! நெய்யும் ஆடையில் ஊடையாய் நான் , உள்பாவு நீ ! கதம்ப மாலையில் கனகாம்பரம் நான் , கவின்மல்லி நீ ! அணியும் நகையில் Read more…

நூல்கள் அறிமுகம்

உன் முகமாய் இரு

உன் முகமாய் இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வசந்தா பதிப்பகம், 2/16-6, ஆர்.கே. இல்லம், வசந்த நகர் முதல் தெரு, ஓசூர்-635109. கிருட்டினகிரி மாவட்டம். 04343-245350 – விலை : ரூ. 80 மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் Read more…

மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 5

கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார். இராமன் இலக்குவன் இருவரையும் மறைவில் நின்று காணும் அனுமன் … “சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் “ என்று Read more…

சிறுகதை

தாய்மை

“என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க” “என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி… நீ ஏன் டென்சனாகுற… ” ” எனக்கு பிடிக்கல அவ்வளோதான்… சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க… ” ” நான் இதுக்கொரு முடிவு கட்றேன்… நீ கிளம்பு செல்லம் நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் நைட் Read more…

புதுக் கவிதை

ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!

நற்கொள்கை வகுக்காமல் அணியில் கூட்டலும் கழித்தலும் அன்றாடம் நிகழ்தலின் உச்சம்! சொத்துக்களைக் குவித்தலும் பெருக்கலுமே குறிக்கோளாய் அரசியலார் கொண்டிருக்கும் அவலநிலை ! காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும் அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க… உழைப்புகளால் கேள்விக்குறியாய் முதுகு வளைந்த மக்களோ… ஆச்சரியக்குறியாய் விழிபிதுங்க நிர்பந்த அடைப்புக்குறிகளுக்குள் தள்ளப்பட்டனர்..! அடடா …. மேற்கோள்கள் அற்ற கட்டுரைபோல் வெறுமனே தமிழின மக்கள் தினம் தினம் போராடித் தோற்றுக் கொண்டிருக்கின்றனர்… ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு !…