கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி

மதுரைத்தாயின் மூத்தமகனே.. கவிதையாய் மனதில் பூத்த மகனே...!!! மஹியும் பேகமும் நபிகளுக்கு பிரியமானவர்களானார்கள் உன்னை ஈன்றதால்... இன்று நபிகளை பிரியமானவராக்கிக் கொண்டாய் மரணத்தை நீ ஈன்றதால்...!! "கவிக்கோ" உன்னைச்சூடி பட்டங்களும் பெருமை பெற்றன.. இன்று உன்னையிழந்து அவையாவும் வெறுமையுற்றன!! சிந்தனைகளின் சிற்பி.... புதுக்கவிதையின் புகழாரம்.... சிலேடை வார்த்தைகளால் பகடையாக்கினாய் எங்கள் மனங்களை... ஆலாபனை தூவி ஆராதித்தாய் நற் குணங்களை...!! "மின்மினிக்கெல்லாம் மேனி திருப்பினால் கப்பல் எப்படி கரை போய் சேரும்"..…

உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க என் உடலில் உயிர்சத்து இல்லை. விதைகளை முளைக்கச்சொல்ல என்மனதில் ஈரமில்லை. வெற்றிடங்களை நிரப்ப வருணபகவானுக்கோ மனமில்லை. கண்விழித்துப்பார்த்தால் வெள்ளைமாளிகைகள் நாற்காலி போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது. ஆழ்துளைக்கிணறுகளின் அட்டகாசம் என் உடலை அங்கஅங்கமாக கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னார்ந்து பார்த்து அழுகின்றேனே? அடைமழையே எம்மை அணுகி ஆறுதல்கூற அஞ்சுகிறாயே? கூட்டம்கூட்டமாய் என்உடலை கூறுபோட கொடியசைத்து அழைக்கிறார்கள். எம்மை ஆண்ட சொர்க்கமே இனி உன்உடலின் வியர்வைத்துளிகளை நான் ருசிக்கமாட்டேன்.…

நான்

மாடிமனை கட்டி யதில் வாழ்ந்தவனும் ''நானே'' கோடிபணம் சேர்த் தங்கே குவித்தவனும் ''நானே'' நாத்திகனாய்க் கதை பேசி வென்றவனும் ''நானே'' கூத்திகளோ டிரவு பகல் கொஞ்சியவன் ''நானே'' சொத்து சுகம் சொந்த பந்தம் என்றிவைகள் தானே இத்தரையில் சேர்த்து வைத்தேன் எல்லாமும் வீணே! மக்கி மடிந் தழிகின்றேன் மண்ணறைக்குள் நானே இற்றிறந்து போனேனா எலும்பேதான் நானா? இதை விடவும் இதை விடவும் இன்னும் அழிவேனா? இதுவரையில் வாழ்ந்ததெது கனவுலகம் தானா?

நாணுகிறேன்!

வெட்கத் தாழ் போட்டு நாணுகிறேன்! கனவுகளில் துகிலுரித்து பார்க்கிறாய்! கவலைகள் கடிணங்கள் எதுவுமில்லை! மழலையாய் உன் மடியில் மலர்கின்றேன்! இரகசிய கனவுகளின் ரகசியம் பூட்டுகின்றேன்! விழிகள் வழியே தெறித்து ஓடுகிறாய்! புலன் இன்பங்கள் பொய்படும்! மெய் அன்பு ஞான பிரபஞ்சத்திற்கு வழி விடும்! புனிதனே புரவியில் வந்து அள்ளிச் செல்லு! நெடு மலை அருவி அடிவாரம் பள்ளி கொள்ளு! விடிந்திடும் முன்னே விடை பெற்றுச் செல்லு! கனவில் வந்ததை கவிதையில்…

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி ! இயற்கையின் நிறத்தினை இயல்பானத் தரத்தினை இருளின் வடிவாக இருக்கப் பெற்றவளே ! கருப்பை இருப்பைக் கவர்ந்து ஈர்த்து கறுப்பை நிறமாய்க் காலத்தில் பெற்றவளே ! உடலோ கறுப்பு உதிரமோ சிவப்பு கட்சியில் இதுதானே கழகத்தின் சிறப்பு ! பேரழகி உன்னைப் பார்த்தால் போதும் , தார்ரோடு என்றும் தலைகவிழ்ந்து கிடக்கும் . அடுப்புக்கரி தோற்றுவிடும் அணங்குஉன் முன்னாலே , அட்டக்கறுப் பென்பது அகிலத்தில் இதுதானோ !…

மரிக்கொழுந்து

தண்ணிக் கொடமெடுத்து தனியாகப் போறவளே தாய்மாமன் நானிரிக்கன் தாகத்தோட தானிரிக்கன் தண்ணியூத்த முறையுமில்ல தாகந்தீர்க்க வழியுமில்ல மஞ்சக் கயிறு தந்தியன்டா மரிக்கொழுந்தா வந்திடுவன் வேகத்தோட நீ பறந்தா தேகத்தோட வேகுதடி தாம்பூலம் மாத்த வாறன் தாமதமாப் போனா என்ன தாமதிச்சி நான் போனா பேமிதிச்சிப் போட்டுடுங்கா பேசாம இருந்து போட்டு கூசாம வந்து கேளு தங்கத்துல செம்பு செஞ்சி தலைக்கிமேல ஒன்ன வெச்சி தாங்கத்தான் நெனச்சிரிக்கன் தாரமா நீ வாடி…

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று என்னை இழுக்க விடைத்தேடி நானும் அந்த பாதை கடக்க அழகாக மங்கை அவள் அங்கு பூத்திருக்க அவளின் அழகில் மயங்கி நானும் பாத்திருக்க காதல் எனும் கனை ஒன்று என்னை அடிக்க பூத்திருந்த மலர் பறித்து நானும் புன்னகைக்க பாத்திருந்த மங்கை அவள் காதலை ஏற்க காதல் வானில் இருவரும் சேர்ந்து பறக்க சதி எனும் விதி ஒன்று எங்களை கடக்க துணையாய் பறந்தவள் காதலெனும்…

மண் வாசனை

1. வளங்கள் பொங்குமா கடலிடை நிமிர்ந்து சிரிக்கிற நம்மட முத்து.. கமுகும், தெங்கும், ரப்பர், தேயிலை, மலையும், பள்ளத்தாக்கும், வான் முட்ட மரங்களும், காட்டாற்று வனப்பும், மணம் பரப்பும் சோலைகளும் நிறைந்ததெங்கட மண்ணு.. கோட்டைக்கொத்தளமுமகழியும், நீர்த்தேக்கங்கள் நிறைஞ்சு மிளிரும், ஓவியம் சிற்பங்களோட கொஞ்சிடுமழகு மனமுமயக்கிடும் கண்ணு.. 2. உயிரோட ஒறவாடும் மண்ணு மணத்த களவாட வந்து குதிச்சதந்த வெடிமருந்து வீச்சம், பெருஞ் சத்தத்தோட பொகைய ஊதி விடும் துப்பாக்கி சொண்டுகளும்,…

தேவதை

இந்த பூமிக்கு இரண்டே இரண்டு தேவதைகள்தான் ... இன்று நீ நாளை நம் மகள் ... உன் வீட்டின் வாசலிலிருந்துதான் தொடங்குகிறது என் உலகம் ... நீ எங்கெல்லாம் கூழாங்கற்களை அள்ளி வீசுகிறாயோ அங்கெல்லாம் சலசலத்து ஓடத் தொடங்கும் நீரோடை ... வணங்கச் செல்லுமுன் தெப்பக்குளத்தில் கால் நனைக்கிறாய் ... கரையில் இருப்பவர்களிடம் விரைந்தோடி உன் அழகை தமுக்கடிக்கின்றன நீரலைகள் ... கோவிலுக்கு நீ வரும் அழகை பார்ப்பதற்காகத்தான் கோபுரத்தின்…

” மண் வாசனை”

கரும்பு கொல்லைக்குள்ளே.. கட்டை வெதைக்கையிலே.. ஏங்கண்ணுக்குள்ள.. ஓங்கண்ண.. வெச்சு புதைச்சுப் புட்ட.. மொளைச்சி வார புல்லு போல.. மனசுக்குள்ள துளுத்து வளந்துபுட்ட.. மண்ணணைச்சு வெக்கறப்போ மனசணைச்சி நின்னுகிட்ட.. ஒரந்தூவி வாரயிலே.. ஒன்னத் தூவி வெச்சிப்புட்ட.. தண்ணி பாய்ச்சுறாப்போல ஒன் பார்வைப் பாய்ச்சினியே.. கரும்பு வளர்ராப்போல.. மளமளன்னு காதல் வளந்துடுச்சே.. பனியாலே செங்கரும்பு திதிப்பேறி போனாப்போல.. ஒன் நெனப்பால திதிப்பாயி மனசு இனிச்சிருச்சு.. பூவரசும் பூத்திடுச்சு.. அரசாணிப்பூ பூத்த கோலமா கொலுவிருக்கு..…
1 2 3 15