மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

மரபுக் கவிதை

இரயிலிருக்கை விடுதூது

காப்பு கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள் நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன் ஊன்செய்தான் காக்க உவந்து ! புதுமை செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் ! என்றாலும் செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ ? – சொல்லுகின்ற தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம் ! ஈதை உணர்ந்திடுவீ ரிங்கு ! நூல் ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டுயான் பாடிக் கவிதைப் பரவசத்தில் – ஈடில்லாக் கற்பனைக் Read more…

மரபுக் கவிதை

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல் கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா? பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை பிணமாகி போனேனே உன் சாபமா? தவம் இருந்தே பசிதான் மறந்தேனே – உயிர் தாய் என்னை ஈன்றதை மறந்தேனே தன்னலம் பாரா தாய்மையின் ஈரம் காய்வதற்குள் உன்னிடம் என்னை இழந்தேனே! சுய நலப் பாவி நான்தானே – இன்னும் சுழன்றது ஆவி வீண்தானே கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? Read more…

மரபுக் கவிதை

தமிழில் உறைந்து போதல்

பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில் மொத்தமாய் ஆவி உடல் மோகனமாய்த் தந்த பின்னே படித்தேன் – கவி – வடித்தேன் நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல் நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை பெற்றணையா தீபமென பேரொளியைச் சிந்துகின்ற நூலைப் – படி – காலை திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு தினந் தவறா அதிகாரம் Read more…

மரபுக் கவிதை

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும்

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும் – எங்கள் வாழ் நாளைச் சிறப்பாக்கிப் பலமூட்டும் தேசத்தின் பேரோங்க வழி காட்டும் – நிதம் தெவிட்டாத தெள்ளமுதாய்ச் சுவை மீட்டும் நேசிப்பே உள்ளத்தை நேராக்கும் – நூல் நெடுங்காலப் பேதமையைச் சீராக்கும் போசிக்கும் வாண்மையிலே ஆளாக்கும் – எம் பொடுபோக்குக் கயமைகளைத் தூளாக்கும் கருவறைக்குட் தங்குகின்ற காலந்தொட்டே – தாய்க் கட்டாயம் நன்னூற்கள் கற்றல் வேண்டும் பெருமளவி லறிவுடைமைப் பெருக்கெடுக்க – எம் பெற்றோர்கள் Read more…

மரபுக் கவிதை

அவளென் அதிகாரம்

(கலிவெண்பா) சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும் கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப் பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால் மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள் நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின் றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஓருணர்ச்சி என்னுள் கருத்தாய் எழுந்து எழுதிடக்காண்; ஊற்றுப் புனல்போல உள்ளம் களிப்புற ஆற்றுப் Read more…

மரபுக் கவிதை

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

குரல்: பாத்திமா பர்சானா வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு —— வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத் —— தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு —— விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள் —- – எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள்! பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை —— பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை முச்சந்தி Read more…

மரபுக் கவிதை

பகையைத் துடைத்திடு

   எட்டுக் குடி கொண்ட இறைவா எட்டும் மக்கள் குரல் கேட்டு வா விரைவா கொட்டும் வெற்றி முரசு நமக்கே கொஞ்சும் தமிழ் ஒலிக்கும் நமக்கே பகையைக் கண்டு துடைத்திடு பசுமையை எங்கும் விதைத்திடு பகை என்ற நிலையை உதைத்திடு பைந்தமிழே பாராள வகை செய்திடு அடிமைக் கொண்டது தமிழினமா – மண்ணில் குடிமைக் கண்டது தமிழினம் கொடுமை நடக்குது தினம் தினம் கொக்கரித்து எழுதே தமிழினம்

மரபுக் கவிதை

உடையாத நீர்க்குமிழி

படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே —– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும் —– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக் —– கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப் —– பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று ! எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ —– எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க் கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த Read more…

By Admin, ago
மரபுக் கவிதை

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா இராமன்கதைக் காவியமோ ? வானவர்க்கும் கிடைக்காத வந்திருக்கும் திரவியமோ ? மின்னலுக்கு ஆடைகட்டி மேதினியில் உதித்ததுவோ ? கன்னலுக்குத் தேன்பாய்ச்சி காலிங்குப் பதித்ததுவோ ? வெடித்திருக்கும் வெள்ளைரோஸ் விவரிக்கும் பேரழகோ ? கொடுத்துவைத்த கோமகனும் குடியமரும் தேரழகோ ? முல்லைமலர் போலிருக்கும் மூக்குத்திப் பொன்னழகோ ? உள்ளமதை வெளிப்படுத்தும் உயர்வானக் கண்ணழகோ ? இதழ்பூசும் வண்ணமது இதயத்தைக் கவர்ந்ததுவோ ? விதவிதமாய்க் காதணிகள் விருந்துக்கு வந்தனவோ ? Read more…