கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி

மதுரைத்தாயின் மூத்தமகனே.. கவிதையாய் மனதில் பூத்த மகனே...!!! மஹியும் பேகமும் நபிகளுக்கு பிரியமானவர்களானார்கள் உன்னை ஈன்றதால்... இன்று நபிகளை பிரியமானவராக்கிக் கொண்டாய் மரணத்தை நீ ஈன்றதால்...!! "கவிக்கோ" உன்னைச்சூடி பட்டங்களும் பெருமை பெற்றன.. இன்று உன்னையிழந்து அவையாவும் வெறுமையுற்றன!! சிந்தனைகளின் சிற்பி.... புதுக்கவிதையின் புகழாரம்.... சிலேடை வார்த்தைகளால் பகடையாக்கினாய் எங்கள் மனங்களை... ஆலாபனை தூவி ஆராதித்தாய் நற் குணங்களை...!! "மின்மினிக்கெல்லாம் மேனி திருப்பினால் கப்பல் எப்படி கரை போய் சேரும்"..…

உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க என் உடலில் உயிர்சத்து இல்லை. விதைகளை முளைக்கச்சொல்ல என்மனதில் ஈரமில்லை. வெற்றிடங்களை நிரப்ப வருணபகவானுக்கோ மனமில்லை. கண்விழித்துப்பார்த்தால் வெள்ளைமாளிகைகள் நாற்காலி போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது. ஆழ்துளைக்கிணறுகளின் அட்டகாசம் என் உடலை அங்கஅங்கமாக கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னார்ந்து பார்த்து அழுகின்றேனே? அடைமழையே எம்மை அணுகி ஆறுதல்கூற அஞ்சுகிறாயே? கூட்டம்கூட்டமாய் என்உடலை கூறுபோட கொடியசைத்து அழைக்கிறார்கள். எம்மை ஆண்ட சொர்க்கமே இனி உன்உடலின் வியர்வைத்துளிகளை நான் ருசிக்கமாட்டேன்.…

ராஜகவி ராகில் – கவிதைகள்

பெண் விடுதலை பற்றி பேசியவன் பையில் வீட்டுச் சாவி ஓடையாக இருந்தாலும் உன்னை நதியாக்குகிறது நம்பிக்கை நம்பிக்கை உதிர்கின்ற போதுதான் நிகழ்கிறது முதல் மரணம் நிலம் உழுகின்ற உழவனைகிழித்து விடுகிறது சமூக ஏர் பூமிக்கு மேல் புதை குழி கட்டில் உழவனை நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது நெற்கதிர் கூட ஏழையைச் சாப்பிட்டு ஏப்பமிடுகிறது சோறு

நான்

மாடிமனை கட்டி யதில் வாழ்ந்தவனும் ''நானே'' கோடிபணம் சேர்த் தங்கே குவித்தவனும் ''நானே'' நாத்திகனாய்க் கதை பேசி வென்றவனும் ''நானே'' கூத்திகளோ டிரவு பகல் கொஞ்சியவன் ''நானே'' சொத்து சுகம் சொந்த பந்தம் என்றிவைகள் தானே இத்தரையில் சேர்த்து வைத்தேன் எல்லாமும் வீணே! மக்கி மடிந் தழிகின்றேன் மண்ணறைக்குள் நானே இற்றிறந்து போனேனா எலும்பேதான் நானா? இதை விடவும் இதை விடவும் இன்னும் அழிவேனா? இதுவரையில் வாழ்ந்ததெது கனவுலகம் தானா?

கவிநுட்பத் துளிப்பாக்கள்

1 " பாட்டியின் சேலை...! கிழிந்தும் உதவியது பேரனுக்கு தொட்டில்" 2 குழந்தையை சுமந்தாள் கூடவே ஒட்டிக்கொண்டது தாய்மை 3 மலர்ந்தது ரோஜா பறிக்கும்  முன் முத்தமிட்டது வண்ணத்துப் பூச்சி 4 மரத்தில் குழந்தை சிற்பம் அணைத்து முத்தமிட்டாள் குழந்தை இல்லா தாய் 5 புதுமைப் பெண்ணோ தனிமையில் செல்கிறது நிலா 6 "நட்சத்திரம் சிரித்ததோ சிதறிக் கிடக்கிறது மெரீனாவில் முத்துக்கள்" 7 "பூந்தோட்டம் பசுமையை மேய்கிறது விழி" 8…

நாணுகிறேன்!

வெட்கத் தாழ் போட்டு நாணுகிறேன்! கனவுகளில் துகிலுரித்து பார்க்கிறாய்! கவலைகள் கடிணங்கள் எதுவுமில்லை! மழலையாய் உன் மடியில் மலர்கின்றேன்! இரகசிய கனவுகளின் ரகசியம் பூட்டுகின்றேன்! விழிகள் வழியே தெறித்து ஓடுகிறாய்! புலன் இன்பங்கள் பொய்படும்! மெய் அன்பு ஞான பிரபஞ்சத்திற்கு வழி விடும்! புனிதனே புரவியில் வந்து அள்ளிச் செல்லு! நெடு மலை அருவி அடிவாரம் பள்ளி கொள்ளு! விடிந்திடும் முன்னே விடை பெற்றுச் செல்லு! கனவில் வந்ததை கவிதையில்…

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி ! இயற்கையின் நிறத்தினை இயல்பானத் தரத்தினை இருளின் வடிவாக இருக்கப் பெற்றவளே ! கருப்பை இருப்பைக் கவர்ந்து ஈர்த்து கறுப்பை நிறமாய்க் காலத்தில் பெற்றவளே ! உடலோ கறுப்பு உதிரமோ சிவப்பு கட்சியில் இதுதானே கழகத்தின் சிறப்பு ! பேரழகி உன்னைப் பார்த்தால் போதும் , தார்ரோடு என்றும் தலைகவிழ்ந்து கிடக்கும் . அடுப்புக்கரி தோற்றுவிடும் அணங்குஉன் முன்னாலே , அட்டக்கறுப் பென்பது அகிலத்தில் இதுதானோ !…

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு ------ வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு தாழ்ந்திடாமல்  மானத்தைக் காப்ப தற்குத் ------ தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை வீழ்ந்திடாமல்  தலைநிமிர்ந்து நிற்ப தற்கு ------ விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே ஏழ்மையிலே  தவிக்கின்ற மக்கள் எங்கள் ------ எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் ! பிச்சையாக  இலவசங்கள் தேவை யில்லை ------ பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை முச்சந்தி  தனில்நின்று கையை ஏந்தி…

உடையாத நீர்க்குமிழி

படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே ----- பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும் ----- அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக் ----- கல்லெனினும் புல்லெனினும் கணவன் என்றே படிப்பின்றி இருந்தநிலை மாறிப் போகப் ----- பட்டத்தால் பகுத்தறிவு பெற்றா லின்று ! எண்ணத்தில் வலிமையின்றி இருந்த பெண்ணோ ----- எழுச்சிப்பா பாரதியின் புதுமைப் பெண்ணாய்க் கண்ணீரைச் சிந்திமூலை அமர்ந்தி ருந்த…

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா இராமன்கதைக் காவியமோ ? வானவர்க்கும் கிடைக்காத வந்திருக்கும் திரவியமோ ? மின்னலுக்கு ஆடைகட்டி மேதினியில் உதித்ததுவோ ? கன்னலுக்குத் தேன்பாய்ச்சி காலிங்குப் பதித்ததுவோ ? வெடித்திருக்கும் வெள்ளைரோஸ் விவரிக்கும் பேரழகோ ? கொடுத்துவைத்த கோமகனும் குடியமரும் தேரழகோ ? முல்லைமலர் போலிருக்கும் மூக்குத்திப் பொன்னழகோ ? உள்ளமதை வெளிப்படுத்தும் உயர்வானக் கண்ணழகோ ? இதழ்பூசும் வண்ணமது இதயத்தைக் கவர்ந்ததுவோ ? விதவிதமாய்க் காதணிகள் விருந்துக்கு வந்தனவோ ?…
1 2 3 26