கட்டுரை

இயற்கையின் பேரழகு சிந்தும் ஷில்லாங்

இயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மேருகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன. மனதைக் கொள்ளையடிக்கும் மலைச் சிகரங்களில் ஊதா நிறம் படர்ந்துள்ளதையும் விரிந்து கிடக்கும் பல நிறப் பச்சை புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றும். ஷில்லாங்கை சீனாவிலுள்ள ஷங்க்ரிலாவுக்கு Read more…