‘ஜன்னல் ஓரத்து நிலா’வைச் சந்தித்தோம்!

எழுத்துலகில், பொதுப்பணிகளில் அயராது தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்துவரும் கவிஞர் த.ரூபனைச் சந்தித்தோம். அவர் காலடித் தடங்களைப் பார்ப்போம் … உங்களைப்பற்றிய அறிமுகத்தை சொல்லுங்கள்? நான் ஊடகங்களில் த.ரூபன் என்றே அறியப்படுகிறேன். எனது பெற்றோர்களால் சூடப்பாட்ட பெயர், தம்பிராசா - தவரூபன். நான் பிறந்து தவழ்ந்த இடம், திருகோணமலை மாவட்டத்தில் வயலும் வயல் சார்ந்த இடமான மருதநிலம் எனும் ஈச்சிலம்பற்றையில் தான். அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த…

நிலாபெண்- திருமதி லறீனா அப்துல் ஹக்

உங்களைப் பற்றிய அறிமுகத்தையும் உங்களது இலக்கியப் பிரவேசத்தின் பின்புலம் பற்றியும் கூறுங்கள்? என்னுடைய முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. என்னுடைய தாயார் பௌசுல் ஹினாயா. மாத்தளை ஃபர்வீன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் 30க்கும் அதிகமான தொடர் கதைகளை எழுதியுள்ளார். 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் பங்குபற்றி எப்போதும் முதல் பரிசைத் தட்டிக்கொண்டு வருவார். நல்ல இனிய குரல்வளம் அவருக்கு. அவரைப் பின்பற்றி, என்னுடைய 09 வயதில் பிரபல…

கானகம் தந்த கவி நிலவு பன்முகக் கவிஞர் சக்தி ஜோதி

தீர்க்கமான் பேச்சு, சிறந்த தமிழாற்றல், நட்பினை மதிக்கும் சீரிய குணம், எப்பொழுதும் முகமலர்ச்சி, வந்தாரை வரவேற்கும் பாங்கு, சீர்மிகு விருந்தோம்பல் இத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்ற கவித்தென்றல் திருமதி. சக்திஜோதி அவர்களின் சந்திப்பின் நீண்ட உரையாடலில் ... படைப்பாளராக உங்களைப் பற்றி நீங்களே ... சிறுவயது முதலாகவே வாசிப்பிற்குள் இயல்பாகவே நுழைந்து விடுபவர்களின்  இறுதியான இலக்கு படைப்பு.  எனக்குள்ளும் அந்தக் கனல் கனன்று கொண்டுதான் இருந்தது. சங்க இலக்கியத்தின்பால் எனக்குள்ள…

எழிலரசியைப் பாடிய எழில்வேந்தன்

பன்முகம் காணும் தாங்கள் எழுதத் துவங்கியது எப்போது? பதினாறு வயதினிலே நான் கவிதைப் பருவம் எய்தி விட்டேன் என்று சொல்லலாம். புதுமுக வகுப்பின் முதல் பருவத்தின்போது நான் எழுதிய கவிதைக்குக் கிடைத்த முதல் பரிசு முத்திரைப் பரிசாகும். பாரதியின் ‘கண்ணன் என் சேவகன்’ கவிதையைப் படித்ததால் ஏற்பட்ட தாக்கம் என்று அதைச் சொல்லலாம். தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்புப் பயிலும்போது என் ஆசிரியாராக இருந்த பிச்சைமுத்து ஆசிரியர் என்னை இலக்கிய…

ஜெயந்தி பேசுகிறேன்…

மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப் படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம். வாசிப்பு சுமார் 14 வருடங்களாக (1990 முதல்) இல்லத்தரசியாகச் சிங்கை…

கவிதாயினி மதுமிதா

விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம். ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர்,…

குறள் தமிழ்ச் செயலி உருவான கதை

கலையரசன் கந்தசாமி, சுருக்கமாக கலை கந்தசாமி புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். புதுவை பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு கடந்த 14 வருடங்களாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவத்தில் மென் பொருள் வல்லுனராக பணி புரிந்து வருகிறார். குறள் எனும் தமிழ்ச் செயலியை தனி ஒருவராக உருவாக்கி அதனை இலவசமாக வழங்கிவருகிறார் கலை. இந்த தொகுப்பில் உள்ள கவிதை என்ற சொற்செயலி ஒரு…

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் ப்ருந்தா நாகராஜனின் சிறுகதைகள், கவிதைகள், இலக்கியம் பேணும் இதழ்களிலும், வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களில் ஓவியம், நடனம் குறித்த இவரின் கட்டுரைகளும், இவை தொடர்பான பல விமரிசனக் கட்டுரைகள் வெகுஜன பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளன. மொழிபெயர்ப்பையும் விட்டு வைக்காத இவர் ஒரு சகலகலாவல்லி. எழுத்தில் ஆளுமை பெற்றிருக்கும் இவர் நகைச் சுவையுணர்வுடைய, இளமையோடு உறுதியும் கொண்ட எப்போதும் இருபது வயதைத்…

‘திசைகள்’ மாலன்

திசைகள் என்னும் இணையப் பத்திரிக்கை ஆசிரியர் திரு.மாலன் பன்முகம் கொண்டவர். இந்தியா டுடே (தமிழ்) தினமணி, குமுதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இப்போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.அமெரிக்காவில் உள்ள புளோரிடா பலகலைக்கழகத்தில் இதழியல் படித்தவர். அங்கு படிக்கும் போது advanced editing என்ற பாடத்தில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர். செய்தி தொடர்பான பணிகளுக்கு நடுவே, இலக்கிய ஆர்வத்துடன் எழுத்தாளர்களையும், இளம்பாடகர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நேர்காணல்கள்…

கவிதாயினி இளம்பிறை

கவிதை, எப்போதாவது தோன்றுவது என்று கருத்தாக்கத்தைத் தள்ளிவைப்போம். நமது மனம் எந்த உணர்வுடனாவது லயம் சேரும் போது அந்த உணர்வுக்கேற்ப கவிதை பிறந்து விடுகிறது. நமது மனம், நினைத்த மாத்திரத்தில் லயம் சேருமானால் நம்மால் நினைத்த நொடியில் கவிதை படைக்க முடியும். கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம்.…