ராஜகவி ராகில் – கவிதைகள்

பெண் விடுதலை பற்றி பேசியவன் பையில் வீட்டுச் சாவி ஓடையாக இருந்தாலும் உன்னை நதியாக்குகிறது நம்பிக்கை நம்பிக்கை உதிர்கின்ற போதுதான் நிகழ்கிறது முதல் மரணம் நிலம் உழுகின்ற உழவனைகிழித்து விடுகிறது சமூக ஏர் பூமிக்கு மேல் புதை குழி கட்டில் உழவனை நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது நெற்கதிர் கூட ஏழையைச் சாப்பிட்டு ஏப்பமிடுகிறது சோறு

மூச்சு

தமிழ் அமுதம் அளவுக்கு மீறி அருந்தினாலும் நீ உயிர்ப்பாய் இன்னும் இன்னும் தமிழ் மங்கைக்கு கவிதைச் சேலை கட்டுகிறேன் அவள் அழகு திருஷ்டி படாமலிருக்க தமிழ் பசு இலக்கியப் பால் கறக்கிறேன் கவிதைத் தயிர் சுவைக்க தமிழ் சாகரம் நான் செல்கிறேன் எழுதுகோல் தோணி செலுத்தி தமிழ் மான் அது துள்ளிவிளையடுகின்ற காடு நீயும் நானும் இறைவா வேண்டும் தமிழ்க் கடலில் நான் ஒரு மீனாகும் வரம் அன்னை மொழி…

என் மூக்குத்தி தேவதைக்கு …

என் மூக்குத்தி தேவதைக்கு ... காதலே கடிதந்தான் பார்வைதான் அதன் எழுத்தென்றாலும் மொழி மேடையில் கவிதை நாட்டியம் ஆடத்தான் ஆசைப்பட்டது அவனது ஊஞ்சல் மனசு அவளுடைய வார்த்தை தேகத்தில் பூத்த வியர்வைத் துளிகள்தான் அவனுக்குத் தெரிந்த ஒரே ஒரு தேன் . அவனுடைய பேச்சுக் கிண்ணத்தில் அவளுடைய புன்னகை மது ஊற்றி அவன் குடித்தபோதுதான் கண்டான் காதல் போதையுடன் தள்ளாடியதை நேர மேகத்தில் அவன் இருதயம் ஊர்வலம் போனது அந்த…