கவிதை

பாவேந்தனே மீண்டும் வா வேந்தனே

சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான் சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்! பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்! நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும் நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்! நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார் நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!