நூல்கள் அறிமுகம்

வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!

எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது.

 » Read more about: வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!  »

நேர்காணல்

பெய்யென பெய்யும் மழை

அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன்.

 » Read more about: பெய்யென பெய்யும் மழை  »

மரபுக் கவிதை

மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள்

நம்பி : ஏ.டி.வரதராசன் 
நங்கை : கலைச்செல்வி

திருமண நன்னாள் : 09.04.2020

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –

 » Read more about: மன்றல் வாழ்த்து மடல்  »

ஹைக்கூ

துளிப்பா

  • சொல்லித்தந்தப் பாடம்
    பதியவில்லை மனதில்
    ஆசிரியை முகம் !
  • எங்கள் வீட்டு தோட்டத்தில்
    மலராத மொட்டு
    முதிர்கன்னி.
  • வீட்டுவாசல் வந்து
    முழம்போட்டுத் தருகிறாள்
    பூக்காரி
  • குறைந்த கூலி
    அவன் நிறைவடைகிறான்
    முதலாளி.
 » Read more about: துளிப்பா  »

பகிர்தல்

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி

வரம்போடு தம்வாழ்வை
    வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
    பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
    உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்
 

 » Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!  »

புதுக் கவிதை

பெண்ணியம் போற்று

படைத்தான் உன்னை கடவுள்
கிரங்க வைத்தாய் என்னை!

உன்னை
உரசிக்கொண்டு
வந்திருக்க வேண்டும்
மென்மையானது காற்று
ஜன்னல் ஓரத்தில்.

ஆழம்தான் உன்னின்
தெரியவில்லை!

 » Read more about: பெண்ணியம் போற்று  »

புதுக் கவிதை

தாயன்பு!

வேதனை வலிகளுடன்
போறாடி எனை ஈன்றெடுத்தாய்!
பாலோடு தேன்கலந்தே
திகட்டாமல் ஊட்டுவித்தாய்!
தேரோடும் வீதியிலே
சலிக்காமல் நடக்க வத்தாய்!
பாரெல்லாம் போற்றிடவே
பண்பாளனாய் நீ வளர்த்தாய்!

 » Read more about: தாயன்பு!  »

நேர்காணல்

‘ஜன்னல் ஓரத்து நிலா’வைச் சந்தித்தோம்!

மலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நூல்கள் அறிமுகம்

மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்

mellisaiththuuralkal_cover_rvகவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது.

 » Read more about: மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்  »

நேர்காணல்

கானகம் தந்த கவி நிலவு பன்முகக் கவிஞர் சக்தி ஜோதி

இயற்கையையும் அதனோடு இணைந்து வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும், இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது வாழ்க்கைமுறையும் என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன். காமம் இன்றிக் காதல் எவ்வாறு இல்லையோ அவ்வாறு குடும்பம், உறவுகள் இன்றிச் சமூகம் இல்லை. இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும், ஆண்டாலும் பாடினார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.