கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி ! இயற்கையின் நிறத்தினை இயல்பானத் தரத்தினை இருளின் வடிவாக இருக்கப் பெற்றவளே ! கருப்பை இருப்பைக் கவர்ந்து ஈர்த்து கறுப்பை நிறமாய்க் காலத்தில் பெற்றவளே ! உடலோ கறுப்பு உதிரமோ சிவப்பு கட்சியில் இதுதானே கழகத்தின் சிறப்பு ! பேரழகி உன்னைப் பார்த்தால் போதும் , தார்ரோடு என்றும் தலைகவிழ்ந்து கிடக்கும் . அடுப்புக்கரி தோற்றுவிடும் அணங்குஉன் முன்னாலே , அட்டக்கறுப் பென்பது அகிலத்தில் இதுதானோ !…

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா இராமன்கதைக் காவியமோ ? வானவர்க்கும் கிடைக்காத வந்திருக்கும் திரவியமோ ? மின்னலுக்கு ஆடைகட்டி மேதினியில் உதித்ததுவோ ? கன்னலுக்குத் தேன்பாய்ச்சி காலிங்குப் பதித்ததுவோ ? வெடித்திருக்கும் வெள்ளைரோஸ் விவரிக்கும் பேரழகோ ? கொடுத்துவைத்த கோமகனும் குடியமரும் தேரழகோ ? முல்லைமலர் போலிருக்கும் மூக்குத்திப் பொன்னழகோ ? உள்ளமதை வெளிப்படுத்தும் உயர்வானக் கண்ணழகோ ? இதழ்பூசும் வண்ணமது இதயத்தைக் கவர்ந்ததுவோ ? விதவிதமாய்க் காதணிகள் விருந்துக்கு வந்தனவோ ?…

சொர்க்கத்தைத் தந்தாயடா !

சாமத்தில் எழுந்து காமத்தில் நுழைந்து மோகத்தை விதைத்தாயடா - இரு போகத்தை அறுத்தாயடா. வேகத்தில் மிதந்து சோகத்தை மறந்து தேகத்தை வதைத்தாயடா - என் தூக்கத்தைக் கெடுத்தாயடா. தாகத்தை நினைந்து மேகத்தைத் திறந்து யூகத்தில் சரிந்தாயடா - பட நாகமாய் விரிந்தாயடா . காகத்தைச் சினந்து கூகையை வெறுத்து தோகையை விரித்தாயடா - என் தூய்மையைப் பறித்தாயடா. ஆகமவிதிப் படியேநீ ஆறுகால பூசையில் சொர்க்கத்தைத் தந்தாயடா - எரி சூளையிலே…

தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்

அல்லிமலர் போலிருக்கும் அழகானப் பெண்ணருகில் கொல்லிப்பலா கொஞ்சுகின்ற கவிஞரிவர் தமிழ்நெஞ்சம் , அள்ளிக்கொண் டுசென்றிடவே ஆவலுடன் நிற்கின்றார் , பள்ளியறைக் காத்திருக்க பலகனவுப் பூத்திருக்க . வெள்ளிநிலவு இங்குவந்து விளையாட்டில் தனைமறந்து பில்லியாட்ஸ் ஆடுகின்ற பேரழகை என்னென்பேன் , துள்ளியாடும் பருவமதில் தோகைதனை விரிக்கின்ற நல்லழகுத் தேவதையை நானிங்குக் காண்கிறேனே !

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா! விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா! உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா! எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா ! உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா! எச்சில் அமுதமாக என்றும் இனிக்குதடா! மீசைக் குத்தினாலும்மி ருதுவாய் இருக்குதடா! ஆசை நிரம்பிடவே அன்புப் பெருகுதடா! அள்ளி அணைக்கையிலே அச்சம் தடுக்குதடா! சொல்லும் வார்த்தையிலே சொர்க்கம் தெரியுதடா! முத்தம் பதிக்கையிலே மேகம் கருக்குதடா! சத்தம் இன்றிமழை சாட்சியாய் இறங்குதடா! உன்னை…

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே - உந்தன் வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே ! பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே - உந்தன் பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே ! அலங்கார நடைபோடும் தேவதையே - உந்தன் அருகினிலே வந்தமரும் சேவடியே ! பலங்காலப் பக்தியிலே அடியவளே - உந்தன் பக்தியினை மெச்சாவிடில் கொடியவளே ! பூமிக்கும் வலிக்காமல் நடப்பவளே - உந்தன் பூவிரல்கள் மலராக்கிக் கடப்பவளே ! சாமிக்கும் உனைக்காண அருள்வருமே - உந்தன்…

கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!

வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும், துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும், படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும் பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும், வடிக்கின்ற கவியெல்லாம் வாழ்வின் அமுதம் வற்றாது அவர்புகழோ வானும் வாழ்த்தும். திரைத்துறையில் நீராடி தீந்தமிழ்ச் சொல்லில் தினம்விளையா டிவரும்நம் தெள்ளுத் தமிழின் நறைபழுத்தச் சொல்லாளன் நாட்டின் செல்வம் நயமாக எடுத்துரைக்கும் நல்லேர் உழவன், குறையில்லாத்…

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அஞ்சாத நெஞ்சினரே வாழி! கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ் நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி! முத்துவேலர் பெற்றெடுத்த முத்தமிழின் பெட்டகமே வாழி! கத்துகடல் அலையனைத்தும் கவறிவீச கலைஞரே வாழி! அண்ணாவின் தம்பியாக அவனியிலே உயர்ந்தவரே வாழி! பொன்னானத் தமிழகத்தின் புகழ்பெற்ற தலைமையே வாழி! பகுத்தறிவுப் பாதையிலே பயணிக்கும் பைந்தமிழே வாழி! தகுதியானத் தலைமகனாய்த் தமிழீந்தத் தன்மானமே வாழி! அனல்தெறிக்க வசனமெழுதி அன்னைத்தமிழ் வளர்த்தவரே வாழி! கனல்நிறைந்த வார்த்தைகளால் கவர்ந்திழுத்த தமிழ்மகனே வாழி!…

பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக் கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில் கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் , வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருப்பினும் வேலைதேடி என்கைதான் விருப்பம் காணும் . நாட்டுக்குள் நடக்கின்ற அநியா யங்கள் நாமறிந்த வேளையிலே எதிர்த்து எழுதி தோட்டாபோல் பாவலன்கை துரிதமாய் ; பகையோ தொகையாக வந்தாலும்…

உழைப்பு

மலர்பறிக்கும் கைகளில் மண்வெட்டி , என்றும் மணம்பரப்பும் தலையில் கல்சட்டி , விரிந்து மைவைக்கும் கண்ணில் புதுமிரட்சி , புதிதாய் நகைவைக்கும் இதழில் நாவறட்சி , மென்மை நடைபயிலும் காலில் பெரும்தளர்ச்சி , நாளும் பூமலரும் உடலில் பூகம்பம் , வானின் மதிபோன்ற முகத்தில் மண்படிதல் , தூய கருநிற முடியில் கசடுறைதல் , ஈர்க்கும் கனிதரும் கன்னம் காயாதல் கண்டீர் .