கதை

உறங்கும் உண்மைகள்

‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா? இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது? ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே? மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள். மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.