கவிதை

காலச்சக்கரம்

கெட்ட பெயரும் கிட்டும் நல்ல பெயரும் வரும் ---------- பட்டப் பெயராய் பொற்காலம் கேடுகாலமென்பர் திட்டமிட்டபடி செய்ய இயலாதவர் பழியுரைப்பர் ---------- வட்டமடித்துத் திரும்ப வராததுதான் கொடுமை வசந்த காலம் வலம்வரும் காதலர்க்கு இனிதாம் ---------- கசந்த காலமோ தோல்வியில் உழல்பவர் ஏசவே அசராது ஓடுபவர் காலத்தோடு ஓடலாம் மகிழ்வே ---------- மசமச என சோம்பல்கொண்டோர் பின்தங்குவரே