புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை
சீதனமாய் பெற்றன்று
வெண்ணிறத்தோலுடையான்
விட்டுசென்ற பசுமை நீ…

பன்னிற மொழியுடையோர்
பாரதநிறம் சேர்த்து
கண்ணிறச் சக்கரம் சுழன்ற
காண்போரின் முத்திரை நீ…

 » Read more about: சுதந்திரம்  »

புதுக் கவிதை

ஞானமெது..?

இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான் .. !!

உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப் பகைக்கு
சூத்திரம் போதித்தான் ..

 » Read more about: ஞானமெது..?  »