புதுக் கவிதை

வாழ்வியம்

பெருங்கடலைத் தாண்டி
வந்துவிட்டோம்,

தேடிவந்த எதுவுமே
இங்கில்லை…

தொலைத்தவை
தொலைந்துவிட்டன…

இனி புதியதோர் தேடலில்
தொலையலாம், வா!

கடக்க எத்தனையோ
கடல்கள் காத்திருக்கின்றன…

 » Read more about: வாழ்வியம்  »

புதுக் கவிதை

பூசணிக்காய்

மென்று துப்பிய செரிக்காத
மீதங்களாய் குவிகிறது
ரத்தம் தோய்ந்த சதையால் ஆன
புதியதோர் எவெரெஸ்ட்டு மலை

பயிராய் வளரும் காலத்தை
காணாமலேயே விதைகளுக்கு
இவர்கள்தம் ரத்தமும் சதையும்
உரமாகி கொண்டிருக்கின்றது

குண்டு தகர்த்தி
தொலைந்த பரம்பரை வீடுகள்
புதியதோர் தலைமுறைக்கு
விசால மயான தேசமாகின்றது

காலமெனும் தொனியிலேறி
அலைகடல் தாண்டுகையில்
குடல்பசி தாங்காமல்
மீன் பசி தீர்க்கின்றனர்

நம்மை போன்ற தோற்றத்தில்
விடுமுறை பீச்சோரமாய் ஒதுங்கும்
இவர்களின் மீதங்கள் கேட்பாரின்றி
கண்டு ம(றை)றக்கப்படுகின்றன

பழம் பணக்காரர்கள் காய்நகர்த்தி
அகந்தைமிகு அரசியல்வாதியை
ஆட்டிவைக்க ஏகபோகமாக
செழிக்கிறது ஆயுத உற்பத்தி

இந்த பூசணிக்காயை மறைக்க
ஒரு பானையில் அரிசி
வெந்துகொண்டிருக்கிறது
வாழ்க மனிதம்!

 » Read more about: பூசணிக்காய்  »

புதுக் கவிதை

அகதி

தாய்நாடு எங்களை முடமாக்கி
எதோ ஒரு இறுதிக்கட்டத்தை
நோக்கி எங்களைத் தள்ளிக்
கொண்டே வருகின்றது …

பூமி எங்களை நசுக்குகிறது
சிறு விதையாயினும்
நாங்கள் அதில் புதைக்கப்பட்டு
உயிர்ப்பிக்கப்படலாம் …

 » Read more about: அகதி  »